search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாகூர் சிறைக்கு மாற்றம்"

    உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

    நவாஸ் செரீப் சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார் என அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். #NawazSharif
    ×